கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச பாடசாலைகளையும் பகல் 12.00 மணியுடன் மூடுமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது .
அதி வெப்ப காலநிலையை கருத்தில் கொண்டு  கிழக்கு மாகாணத்தில்  உள்ள  சகல அரச பாடசாலைகளையும்  நாளை  முதல் (03) எதிர் வரும் வெள்ளிக்கிழமை (06) வரை காலை 7.30 தொடக்கம்  பகல் 12.00 மணிவரை பாடசாலை நடாத்துமாறு  கல்வி அமைச்சின் உத்தரவுக்கமைய  சகல அதிபர்களுக்கும் கிழக்குமாகாண  கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.நிஸாம்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 இதன் பிரகாரம் கல்முனைகல்வி வலயத்தில் உள்ள பாடசாலை அதிபர்கள் இந்த உத்தரவை அமுல் படுத்துமாறு  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் அறிவித்துள்ளார் 


Post a Comment

 
Top