கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை எக்ஸ் றே  பிரிவுக்கு  மருதமுனை  பறக்கத் டெக்ஸ் நிறுவனம் ஒரு தொகை எக்ஸ்றே  கவர்  அன்பளிப்பு செய்துள்ளது.
பறக்கத் டெக்ஸ் நிறுவனத்தின்  பணிப்பாளர்  எம்.ஐ.ஏ.பரீட்  தனது சொந்த நிதியில் இந்த உதவியை வழங்கினார். கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் Dr.ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களும் பறக்கத் நிறுவன ஊழியர்களும் கலந்து கொண்டனர் . இந்த உதவியை வழங்கிய பறக்கத் நிறுவனத்துக்கும் அதன் பணிப்பாளருக்கும் வைத்திய அத்தியட்சகர் நன்றி தெரிவித்தார் 

கருத்துரையிடுக

 
Top