கல்முனை கல்வி வலயத்தில் சாதனை படைத்த  நற்பிட்டிமுனை அல் - அக்ஸா மகா வித்தியாலயம் மற்றும்  லாபீர் வித்தியாலய மாணவர்களுக்கு கல்வி அமைச்சில் பாராட்டு வைபவம் நேற்று இடம் பெற்றது .

சாதனை மாணவர்களுக்கு நினைவு சின்னம் தங்கப் பதக்கம், சான்றிதழ்  வழங்கி கல்வி  ராஜாங்க அமைச்சர் வீ. இராதா கிருஷ்ணன்  கௌரவித்தார்.

நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அமைப்பின் அனுசரணையுடன்  இந்த கௌரவிப்பு விழா நேற்று செவ்வாய்க் கிழமை (26) கல்வி ராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் இடம் பெற்றது.

நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அமைப்பின் தலைவரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் இணைப்பாளருமான சீ .எம்.ஹலீம்  தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான  சி.எம்.முபீத்  உட்பட  நற்பிட்டிமுனை  அல் -அக்ஸா மகாவித்தியாலய அதிபர் எம்.எல்.ஏ.கையூம்,பிரதி அதிபர்களான திருமதி முனாசீர்,வீ.ஸம் ஸம் ,ஏ.சாலிதீன்  உட்பட லாபீர் வித்தியாலய அதிபர் திருமதி ஜெஸ்மினா  ஹாரீஸ், பிரதி அதிபர் எம்.எல்.அஷ்ரப்,நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் யு.எல்.எம்.பாயீஸ்  ஆகியோருடன்  பாடசாலைகளின் சாதனை மாணவர்களும் கலந்து கொண்டனர்.

ராஜாங்க அமைச்சரை  சந்தித்த அதிபர்கள் மாணவர்களை  பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கான  அனுமதியை பெற்றுக் கொடுத்ததுடன் பகல் போசனமும் பாராளுமன்றில் ஒழுங்கு செய்யப் பட்டது.நட்பிட்டிமுனையில் உள்ள மாணவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகவே காணப் பட்டது  இதுவரை  எந்தவொரு அரசியல் வாதியும் செய்து கொடுக்காத அரிய வாய்ப்பை மாணவர்களுக்கு  ராஜாங்க அமைச்சர் செய்து கொடுத்துள்ளதாக மாணவர்களும் ,அதிபர்களும்  தெரிவித்து  இந்த வாய்ப்பை பெற்று தந்த ஹலீமுக்கும் ,முபீதுக்கும் நன்றி தெரிவித்தனர்.
அதன் பின்னர் கௌரவிப்பு நிகழ்வு  அமைச்சில் இடம் பெற்றது . மாணவர்களை பாராட்டி கௌரவித்த ராஜாங்க அமைச்சர்  வீ.இராதாகிருஷ்ணன் அதிபர்களுக்கும் பரிசு வழங்கி கௌரவித்தார்.

நட்பிட்டிமுனையில் உள்ள இரண்டு பாடசாலைகளிலும் காணப் படுகின்ற குறை பாடுகளை  அதிபர்களிடம் கேட்டு அறிந்து கொண்ட அமைச்சர் நற்பிட்டிமுனை கல்வி வளர்ச்சிக்காக தன்னை அற்பணிக்கும்  துடிப்புள்ள இளைஞனாக காணப் படுகின்ற ஹலீம் மற்றும் முபீத் ஊடாக  நிறைவேற்றி தருவேன் என  வாக்களித்தார்.
இந்த நிகழ்வுகளில் அமைச்சரின்  பிரத்தியேக செயலாளர்,அமைச்சு செயலாளர் உட்பட  பலர் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் ஹலீம் தலைமயிலான குழுவினரால் அமைச்சருக்கு நினைவு சின்னம்  வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் பட்டன .


கருத்துரையிடுக

 
Top