(யு.எம்.இஸ்ஹாக் )
நற்பிட்டிமுனை லாபீர்  முன்பள்ளிப்  பாடசாலை  வருடாந்த பரிசளிப்பு விழா நாளை (20)  பகல் 1.30 மணிக்கு  பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில்  லாபீர் வித்தியாலய பிரதான மண்டபத்தில்  இடம் பெறவுள்ளது.

இவ்விழாவில்  தென்கிழக்குப் பல்கலைக்கழக  சிரேஸ்ட விரிவுரையாளர்  கலாநிதி எச்.எம்.எம்.நளீர் பிரதம அதிதியாக கலந்து கொள்வதுடன்  கௌரவ
அதிதிகளாக  கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.ஜஹ்பர் , அம்பாறை மாவட்ட  முன் பள்ளிப்  பணியகத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் ஐ.எல். அனீஸ் ஆகியோரும் ,  விசேட அதிதிகளாக  லாபீர் வித்தியாலய அதிபர் திருமதி.ஜே.ஹரீஸ் ,வலயக் கல்வி அலுவலக திட்ட உத்தியோகத்தர்  சி.எம்.நஜீப் , லாபீர் வித்தியாலய பிரதி அதிபர் எம்.எல்.எம்.அஸ்ரப் , பகுதி தலைவர் மௌலவி .எம்.ரீ.ஏ.மனாப் ஆகியாகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

கருத்துரையிடுக

 
Top