(பி.எம்.எம்.ஏ.காதர்)
ஹாஜி அக்பர் ஜெமீல் 
மருதமுனையைச் சேர்ந்த ஹாஜி அக்பர் ஜெமீல்  அடிப்படை கல்விக்கான ரஷ்யா சர்வதேச பல்கலைக்கழகத்தில் ராஜதந்திரமும்  வெளிநாட்டு உறவுகளுக்குமான கலாநிதி பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார். 

எதிர்வரும் 2015-11-26ம்,27ம் திகதிகளில் சென் பீட்டஸ் பேக் ரஷ்யாவில் நடை பெறவுள்ள  7வது சர்வதேச விஞ்ஞானிகள் மாநாட்டில் கலந்து கொள்ளும் இவர்  இவருக்கான கலாநிதி பட்டத்தைப் பெறவுள்ளார்.
மேற்படி பல்கலைக்கழகத்தில் சர்வதே நாடுகளைச் சேர்ந்த 35 மாணவர்களில் இலங்கையில் இருந்து இவர் மட்டுமே குறித்த  கற்கைநெறிக்கான கலாநிதி பட்டத்தை பெறுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி,கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி,மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரி  ஆகியவற்றின் பழைய மாணவராவார்.கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான மானி பட்டதாரியான இவர் றியாத் பல்கலைக்கழகத்தில் அறபு மற்றும் ஆங்கில டிப்ளோமா பட்டத்தையும் பூர்த்தி செய்துள்ளார் .
மேலும் லண்டன் புறுனல் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான கணணி பொறிமுறை திட்ட டிப்ளோமா பட்டத்தையும் பூர்த்தி செய்துள்ளார்.இவர் ஜோர்தான்,லெபனான் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கைத் தூதுவராலயங்களில், கவூன்சிலராகவும்,தொழில் திணைக்கள தலைவராகவும்  கடமையாற்றிவிட்டு தற்போது இலங்கை வெளி நாட்டு வேலைவாய்புப் பணியகத்தில் சிரேஷ்ட முகாமையாளராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்தாகும். 
மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம்களான அல்ஹாஜ் இப்றாலெப்பை,ஹாஜியானி றைஹானத்தும்மா தம்பதியின் புதல்வாரன இவர் மருதமுனையில் கலாநிதி பட்டத்தைப் பெறும் பதினைந்தாவது நபராவார்.சமூக சேவையில் அதிக ஆர்வம் கொண்டு செயற்படும் இவர் வறிய மக்களுக்கு பல்வேறுபட்ட உதவிகளைச் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்து. 

கருத்துரையிடுக

 
Top