Knowledge Force  நவம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை சாய்ந்தமருது Lee Maridian மண்டபத்தில் மாபெரும் புத்தகக் கண்காட்சியையும், மாணவர்களுக்குரிய தொழில் வழிகாட்ல்களையும் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது.

The biggest education, Job & Book Fair in the Eastern Province of Srilanka  எனும் பெயரில் நடைபெறுவுள்ள இப்புத்தகக் கண்காட்சி பற்றி நேற்றிரவு (17.10.2015) கல்முனை ஸாஹிரா கல்லூரியின் மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் Knowledge Force நிறுவனத்தின் பணிப்பாளர் இஸ்ரத் இஸ்மாயில் தெரிவிக்கையில்,

மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ள இக்கண்காட்சி மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், பெற்றோர்கள், தொழில் புரிகின்றவர்கள் என பலருக்கும் பயனுள்ளதாக அமையவுள்ளது. இக்கண்காட்சியை பார்வையிடுவதற்கு சுமார் 12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் பேர் வருகை தருவார்கள் என்று எதிர் பார்க்கின்றோம்.

இக்கண்காட்சியில் 26 கல்வி நிறுவனங்களும், 22 தொழில் பயிற்சி நிறுவனங்களும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் பயிற்சியுடன் தொடர்புடைய 16 நிறுவனங்களும் இணைந்துள்ளன.

கண்காட்சிக்கு புறம்பாக மாணவர்களுக்கும், ஏனையவர்களுக்கும் கருத்தரங்குகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.

பாடசாலை கல்வியை முடித்துக் கொண்டு வெளியேறியுள்ளவர்கள் பல்கலைக் கழகங்களுக்கு செல்ல முடியாதவர்களுக்கு முறையான வழிகாட்டுதல்கள் இல்லாதிருப்பதனால்  அவர்கள் பெரும் செலவு செய்து சில நெறிகளை பூர்த்தி செய்துள்ளார்கள். ஆனால், அவற்றைக் கொண்டு தொழில்களைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளன. ஆதலால், எதிர்காலத்திற்கு ஏற்ற துறைகைளை தெரிவு செய்வதற்குரிய வழிகாட்டுதல்களையும் செய்வதற்கு எண்ணியுள்ளோம்.

இன்று எம்மிடம் இருந்த பல வருமானத்துறைகள் எம்மை விட்டும் கைநழுவிப் போய் விட்டன. இன்று சுற்றுலாத்துறையும், கல்வியுதான் வருமானத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடிய துறைகளாக உள்ளன. இவற்றில் கவனம் செலுத்த வேண்டும். பாடசாலை கல்விக்குப் பின் ICT, Business management   துறைகளில் நல்ல தொழில் வாய்ப்புக்கள் உள்ளன. இவற்றிலும் நமது கவனம் செல்ல வேண்டும். இவை பற்றி பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள் போன்றவர்கள் மாணவர்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

இக்கண்காட்சியை வெற்றிகரமாக செய்து கொள்வதற்கு கல்முனை ஸாஹிரா கல்லூரியுடன் உடன்படிக்கை ஒன்றினையும் செய்துள்ளோம் என்றார்.



இந்நிகழ்வில் கல்முனை ஸாஹிரா கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன், சாய்ந்தமருது கோட்ட உதவிக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.ரஹ்மான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.





கருத்துரையிடுக

 
Top