கல்முனை வலயக் கல்வி அலுவலக வாணிவிழா இன்று செவ்வாய்க் கிழமை (20) பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.மயில்வாகனம் தலைமையில் இடம் பெற்றது .
நிகழ்வில்  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன்  கல்முனை அம்பலத்தடி  ஆலய பிரதம குரு சிவா ஸ்ரீ  ரவி ஜீ  குருக்கள் கலந்து கொண்டு சமய சொற்பொழிவாற்றினார் . பாண்டிருப்பு  மாணிக்கப் பிள்ளையார் ஆலய பிரதம் குரு கு.சபாரத்தினம் குருக்களால் வழிபாடுகள் நடத்தப் பட்டன 
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை ,வெஸ்லி உயர்தர பாடசாலை,இராம கிருஷ்ணமிஷன் மகா வித்தியாலய மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் அங்கு இடம் பெற்றதுடன் அவர்களுக்கு பரிசளிப்புக்களும் இடம் பெற்றது.
பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான ஏ.எல்.எம்.முக்தார், பீ.எம்.வை அரபாத் கணக்காளர் எல்.ரீ.சாலிதீன் ,பொறியியலாளர் கீ.அருண்  உட்பட கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள்,உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், நிருவாக உத்தியோகத்தர் உட்பட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். அபிவிருத்தி உத்தியோகத்தர் வீ.ரவீந்திரன் நன்றியுரை வழங்கினார் .
























கருத்துரையிடுக

 
Top