யு.எம்.இஸ்ஹாக் 

கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையில் ஆசான்களுக்கான பெரு விழா இன்று வியாழக் கிழமை நடை பெற்றது.

கல்லூரி முதல்வர் வீ.பிரபாகரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் மற்றும் அதிதிகளான, பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.மயில்வாகனம் , கல்முனை தமிழ் பிரிவு கோட்டக்  கல்விப் பணிப்பாளர் வீ.ஜெகநாதன் ,கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய அதிபர் எம்.சி.எம்.அபூபக்கர், கல்லூரி பிரதி அதிபர் ஏ.கலையரசன்  ஆகியோர்  வரவேர்க்கப் பட்டனர் .

கல்முனை வரலாற்றில் முதல் தடவையாக கல்லூரி ஆசிரியைகளால் பேண்ட் வாத்தியம் முழங்க அதிதிகள் வரவேற்கப் பட்டனர் .  கல்லூரி ஆசான்களை மாணவர்கள் மலர் மாலை அணிவித்து கௌரவித்ததுடன்  பரிசுகளும்  வழங்கப் பட்டன .
நிகழ்வில் பிரதீபா பிரபா விருது பெற்ற அதிபர் உட்பட்ட ஆசிரியர்களும் கௌரவிக்கப் பட்டனர் 

Post a Comment

 
Top