கல்முனை பிரதேச செயலக பிரிவில் உள்ள  திவிநெகும பயனாளிகளின் உற்பத்திபொருள் விற்பனையும் கண்காட்சியும் எதிர்வரும் திங்கட் கிழமை  12 கல்முனைக்குடி  கிறீன்  பீல்ட்  சமுதாய அடிப்படை வங்கி முற்றத்தில்  நடை பெறவுள்ளது .

திவி நெகும  தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர் .எம்.சாலிஹ் தலைமையில் இடம் பெறவுள்ள வைபவத்தில்  விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்  பிரதம அதிதியாக  கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைக்கவுள்ளார் .

கல்முனை பிரதேச செயலாளர்  எம்.எச்.முகம்மட்  கனி , திவி நெகும மாவட்டப் பணிப்பாளர்  சண்டுருவன் அனுருத்த  ஆகியோர் விசேட அதிதிகளாகவும் , பிரதேச செயலக கணக்காளர் எம்.எம்.எம்.ஹுசைன்தீன் ,  திவி நெகும மாவட்ட இணைப்பாளர்  ஐ.அலியார்  ,திவி நெகும மாவட்ட கருத்திட்ட முகாமையாளர்  யு.எல்.எம்.சலீம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் , மற்றும் திவி நெகும மகா சங்க முகாமையாளர்  எஸ்.எஸ்.பரீரா ,திட்ட முகாமையாளர் ஏ.சி.அன்வர் , திவி நெகும வங்கி முகாமயாளர்களான  எம்.எம்.முபீன் ,எஸ்.சதீஸ் ஆகியோர்  அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர் 

கருத்துரையிடுக

 
Top