வாழ்வின் எழுச்சி  சிறுவர் கழகங்களுக்கிடயிலான  நாடகப் போட்டியில் அம்பாறை மாவட்டத்தில்  முதலிடம்  பெற்ற  கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய மாணவிகள் முதலிடம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர் .
மாணவிகளான எம்.ரீ.எப் .சம்ரி ,எஸ்.எச்.எப்.சிம்ரா ,ஏ.எப்.அப்சானா ,எஸ்.எப்.சிப்னு ஏ.எப்.பரீஸா , எஸ்.எச்.எப்.ஹீரா,எச்.எப்.ரிஸாபா ,ஏ.எப்.றினா  ஆகிய  மாணவிகளே போட்டியில் பங்குபற்றி  முதலிடம் பெற்றனர் .

குறித்த மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்வு அண்மையில்  கல்லூரி மண்டபத்தில் அதிபர் எம்.சி.எம்.அபூபக்கர் தலைமையில்  நடை பெற்றது . பிரதி அதிபர்  திருமதி எஸ்.ஜே.ஏ.கபூர்  உட்பட ஆசிரியைகளால் பரிசு வழங்கி வைக்கப் பட்டது .

அதே வேளை  குறித்த மாணவிகளை பாராட்டி  விளையாட்டு துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்  பரிசு சான்றிதழ்  வழங்கி கௌரவித்த நிகழ்வும் அண்மையில் இடம் பெற்றது 



Post a Comment

 
Top