இந்தக் காணிகளை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் அம்பாறை மாவட்ட சர்வமத பேரவையினால் முன்னெடுக்கப் பட்டது. அம்பாறை மாவட்ட சர்வமத பேரவையின் தலைவர் மௌலவி ஏ.ஏ.அஸ்ஹர் தலைமையில் கல்முனை கிரிஸ்டா இல்லத்தில் நடை பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான எம்.ஐ.அமீர் கே.விமலநாதன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு காணி உரிமையாளர்களிடம் ஆவணங்களைக் கையளித்தனர்.
நிகழ்வில் காணிகளை இராணுவத்திடம் இருந்து பெற்று உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் , சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.ஏ.மன்சூர், கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன், ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப் பட்டதுடன் மும்மத சமய கலாச்சார நிகழ்வுகளும் அங்கு இடம் பெற்றன.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் , சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.ஏ.மன்சூர், உட்பட மீளக் காணியைப் பெற்றுக் கொண்ட காணி உரிமையாளர் ஒருவரும் கருத்து தெரிவித்தார்.

கருத்துரையிடுக