கல்முனை பிரதேசத்தில் சர்வதேச சிறுவர் தினம் பல்வேறுபட்ட நிறுவனங்களினாலும் ஏற்பாடு செய்யப் பட்டு மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
விசேடமாக கல்முனை செலான் வங்கி கிளையினால் ஏற்பாடு செய்யப் பட்ட சிறுவர் தின நிகழ்வு அனைவரையும் மனம் நெகிழச் செய்தது .
கல்முனை கிளை செலான் வங்கி முகாமையாளர் திருமதி பிறேமினி மோகன்ராஜ் தலைமையில் வங்கி கிளை முன்பாக இடம் பெற்ற சிறுவர் தின நிகழ்வில் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக ஒரு குடும்பத்தில் இடம் பெறும் வன்முறை சம்பவத்தை சித்தரிக்கும் வகையில் வீதி நாடகம் அரங்கேற்றப் பட்டது .
கல்முனை கார்மேல் பற்றிமா ,கல்முனை உவெஸ்லி ,கல்முனை ஆர்.கே .எம் ஆகிய பாடசாலை மாணவ மாணவிகள் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் . வங்கி அதிகாரிகளும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்
கருத்துரையிடுக