(பி.எம்.எம்.ஏ.காதர்)

கல்முனை கல்வி வலய முஸ்லிம் கோட்டப் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டு விழா-2015 இன்று சனிக்கிழமை  காலை 8.00 மணிக்கு மருதமுனை மசூர்மௌலானா விளையாட்டுத் தொகுதியில் நடைபெறவுள்ளதாக கல்முனை கல்வி வலய சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டு இணைப்பாளர் எச்.நைறூஸ்கான் தெரிவித்தார்.
கோட்டக் கல்விப் அதிகாரி எஸ்.எம்.ஏ.ஜஹ்பர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர். எம்.எஸ்.அப்துல் ஜலீல் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.கௌரவ அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வி.மயில்வாகனம், ஏ.எல்.எம்.முக்தார், எஸ்.எல்.ஏ.றஹீம், பி.எம்.யாஸீர் அறபாத் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
விஷேட அதிதிகளாக கல்வி வலய கணக்காளர் எல்.ரி.சாலிதீன்,பொறியிலாளர் ஜி.அருண்  விசேட  அதிதியாக உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஜஹாங்கீர்  ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.
இந்த விளையாட்டு விழாவில் கோட்டத்திலுள்ள  15 பாடசாலைகளைச் சேர்ந்த 3ம்,4ம்,5ம்  தரங்களில் கற்கும் 700 மாணவர்கள் பங்குபற்றவுள்ளதாக சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டு இணைப்பாளர் எச்.நைறூஸ்கான் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

 
Top