எஸ்.எம்.எம்.றம்ஸான்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் அஷ்சஹீத் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் 15 ஆவது ஞாபகார்த்த தினத்தையொட்டி கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் மரம் நடுகையும் , து ஆப் பிரார்த்தனையும் மற்றும்  விஷேட பேருரையும் இடம் பெற்றது.
 பாடசாலை அதிபர் யு.எல்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  ஏ.எல்.எம்.நசீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மரங்களை நட்டதுடன் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் நினைவுப் பேருரையையாற்றியதுடன் கல்முனைக் கடற்கரைப் பள்ளியின் பேஷ் இமாம் மௌலவி என்.ஏ.எம்.ஜப்ரான் அவர்களினால் துஆப்பிரார்த்தனையும் செய்யப்பட்டது. 
பாடசாலை கூட்ட மட்டபத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை பிரதி, உதவி அதிபர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Post a Comment

 
Top