(பி.எம்.எம்.ஏ.காதர்)
மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் மறைவின் 15வது ஆண்டு நிறைவையொட்டி மர்ஹூம் மருதூரக்கனி ஞாபகார்த்த கல்வி மேம்பாட்டு நிலையத்தின் அனுசரனையுடன்; மருதமுனை மருதூர்க்கனி ஞாபகார்த்த பொது நூலகத்திற்கு மருதூர் கனியின் புதல்விகளின்   ஐம்பதாயிரம் ரூபா நிதியில் பெறுமதியான புத்தகங்களும் புத்தக இராக்கையும் நேற்று (16-09-2015)அன்பளிப்புச் செய்யப்பட்டது.
மர்ஹூம் மருதூர்க்கனியின் பாரியார் காமிலா ஹனிபா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு  புத்தகங்களையும்,புத்தக இராக்கையையும் நூலகர் திருமதி  நஸ்லியா காசிம் உமர்கத்தாவிடம் கையளித்தார்.
இந்த நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி,மர்ஹூம் மருதூர்கனி ஞாபகார்த்த கல்வி மேம்பாட்டு நிலையத்தின் பொறுப்பாளர் ஒய்வு  பெற்ற அதிபர் எம்.எச்.குமாயூன் ஆகியோருடன் நூலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.




Post a Comment

 
Top