(அகமட் எஸ். முகைடீன்)


புரிதலுடன் வாழ்ந்து, மனக் கறையகற்றி, மணங்கமலும் நல்லதோர் வாழ்வினை இஸ்லாமிய அடிப்படையில் வாழ்வதற்கு புனித ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருல்புரிய பிரார்த்திப்பதாக கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான சிராஸ் மீராசாஹிப் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இப்றாஹீம் நபி (ஸல்) அவர்களின் பெரும் தியாகத்தை நினைவூட்டும் ஹஜ்ஜூப் பெருநாள் எம்மத்தியிலும் தியாக உணர்வை ஏற்படுத்துவதோடு இஸ்லாம் காட்டித்தந்த சீரிய பாதையில் பயனிப்பதற்கு ஆசையுடையவர்களாக அனைவரையும் மாற்ற வேண்டும். உலக மக்கள் சகோதரத்துவத்துடனும் இன நல்லுறவுடனும் வாழ்வதற்கு வழிகுக்கும் ஒரு திருநாளாக இந்நாள் அமைவதோடு எமது நாட்டில் நல்லாட்சி நீடிக்கவும் இறைவன் துணைபுரிய வேண்டும். அத்தோடு புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றிய ஹாஜிகளின் ஹஜ்களை இறைவன்  பொருந்திக் கொள்வதற்கும் ஏனையவர்களுக்கும் புனித ஹஜ் கடமையினை  நிறைவேற்ற அருல்பாலிப்பதற்கும் இறைவனிடம் இருகரம் ஏந்தி பிராத்திப்பதாகவும் தெரிவித்தார்.

Post a Comment

 
Top