( எஸ்.எம்.எம்.றம்ஸான் )

சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு பாடசாலை மட்டத்தில் தரம் 4 பிரிவு மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கேடயம்  வழங்கும் நிகழ்வு   கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

சதா வேக்சொப்பின் அணுசரனையில் பாடசாலை அதிபர் ஏ.எச். அலி அக்பர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றஹீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருக்கிக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



Post a Comment

 
Top