நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்டு திகாமடுல்ல மாவட்டத்தில் வெற்றியீட்டிய சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது.

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ள திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்  பிரதி அமைச்சர் பதவியேற்று முதற்தடவையாக 12.09.2015ம் திகதி சனிக்கிழமை தனது கல்முனை மண்ணுக்கு விஜயம் செய்திருந்த நிலையிலேயே பிரதி அமைச்சரை வரவேற்க மாளிகைக்காடு தொடக்கி கல்முனைத் தொகுதி எங்கும் விழாக்கோலம் பூண்டிருந்தது. 

Post a Comment

 
Top