எனக்கு எதிராக நீதிமன்றுக்கு சென்று தோல்வி கண்டவர்கள் வீழ்ந்தும் மீசையில் மண் படவில்லை என்று சொல்வது போன்று  நான் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப் பட்டாலும்  ஆசனத்தை இழக்கும் ஆபத்து உள்ளது என்று மீண்டும் மக்களை திசை திருப்ப  ஹக்கீம் சம்மாந்துறைக்கு இன்று  பேச்சாளர்களை அனுப்பியுள்ளார் .

இவர்கள் எதை சொன்னாலும் மக்கள் உண்மையை புரிந்து கொண்டுள்ளனர் . நேற்றைய  நீதிமன்ற தீர்ப்பின் பின்னர்  மக்கள் எம் பக்கம் சாரிசாரியாக வருகின்றனர் இதனை தடுப்பதற்கே  இந்த நடவடிக்கையும் புலுடாவும் என்று  உபவேந்தர்  இஸ்மாயில்  தெரிவித்தார் .

அது மட்டுமன்றி  இந்த வழக்கை  தாக்கல் செய்து வாதாடிய சட்டமுதுமானி
 நிசாம் காரியப்பர்  கூட  அவசர அவசரமாக  உலங்கு வானூர்திமூலம்  கொழும்பில் இருந்து இன்று கல்முனைக்கு வந்துள்ளார் . இன்று அவரும் சம்மாந்துறையில் நியாயப் படுத்தி பேசுவார்  நேற்று அவரது நியாயப் படுத்தல் நீதிமன்றத்தில் தோற்றுப் போனதால் அவர்களது  வழமையான கைங்கரியமான மக்களை  பொய் சொல்லி திசை திருப்ப வருகிறார்கள்.

இவர்கள் எதை கூறினாலும் மக்கள் இவர்களின் பொய்களில்  இனி விழமாட்டார்கள் சம்மாந்துறை மக்கள் இவர்களுக்கு வாக்களிப்பதில்லை என்ற முடிவை  ஏலவே எடுத்து விட்டனர் .

கருத்துரையிடுக

 
Top