காலம் சென்ற மதிப்புக்குரிய  எம்.கனகரட்ணம்  கூட்டணியில் வெற்றி பெற்று பாராளுமன்றம்சென்றாலும்  ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாறிய பின்பே திகாமடுள்ள மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு  மகத்தான சேவை புரிந்தார் என்பது யாவரும் அறிந்த உண்மை என்று நேற்று பாண்டிருப்பு தமிழ் கிராமத்தில் நடை பெற்ற  ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டதில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் பொ.சுவர்ணராஜ் தெரிவித்தார்.

அவர் தொடரந்து உரையாற்றுகையில் கனகரட்ணம் அவர்களின் பணி திகாமடுள்ள மாவட்டத்தில் தொடரப்பட வேண்டுமானால்  கானல் நீர் போன்று தேர்தல் காலத்தில் ஒப்பாரி வைப்பவர்களை  அலட்டிக் கொள்ளாமல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து தமிழ் மக்கள் இறந்த காலத்தைப் பற்றி சிந்திக்காமல்  நமக்கு எதிர்காலமே முக்கியம் எனவே தமிழ் மக்கள் யானைக்கு வாக்கலிக்க்க வேண்டும்  என அவர் தனது உரையில் தெரிவித்தார.

கருத்துரையிடுக

 
Top