இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமான 8வது பாராளுமன்ற  தேர்தலுக்கான வாக்களிப்பு 4.00 மணிக்கு நிறைவு  பெற்று வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் மத்திய நிலையமான அம்பாறை ஹாடி தொழில் நுட்பக் கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் எடுத்து வரப் படுகின்றன. வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லப் படும் பாதைகளில் வாக்குச் சோதனை சாவடிகள் அமைக்கப் பட்டு கண்காணிப்பு இடம் பெறுவதையும் காணமுடிகின்றது.

இன்று காலை 7.00 மணி தொடக்கம் திகாமடுள்ள மாவட்டத்தில்  464 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு மிகவும் அமைதியாக நடை பெற்று முடிந்ததாக திகாமடுள்ள மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் திலின விக்கிரம ரத்ன தெரிவித்தார். 
வாக்கெண்ணும் மத்திய நிலையமாக அம்பாறை ஹாடி தொழில் நுட்பக் கல்லூரியில் அமைக்கப் பட்டுள்ள 53 வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் இடம் பெறவுள்ளன. இதில் 13 நிலையங்களில் தபால் வாக்கு தனியாக எண்ணப்படவுள்ளதாகவும் தபால் வாக்கு முடிவுகள் நள்ளிரவுக்கு முன்னதாக வெளியிடப்படும் எனவும் உதவி தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
மாவட்டத்தின் அனைத்துப் பிரதேசத்திலும் உள்ள 464 வாக்களிப்பு நிலையங்களிலுமிருந்து வாக்குப் பெட்டிகள் வந்து சேர்ந்ததும்; வாக்கெண்ணும் பணிகள் உடன் ஆரம்பிக்கப் பட உள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் திலின விக்கிரம ரத்ன தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top