நாளை 17 ஆம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் வசதிக்காக தகவல் கருமபீடமொன்றினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23, 24, 25 ஆம் திகதிகளில் மு.ப 09.30 முதல் பிற்பகல் 03.30 வரை பாராளுமன்ற கட்டட தொகுதியில் இந்த தகவல் கருமபீடம் நடத்தப்படும் என்று பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பிலான அறிக்கையொன்று வெளியிடும் போதே இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான தகவல்களையும் ஆவணங்களையும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதனால் இந்த நாட்களில் தவறாமல் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பாராளுமன்றத்திற்கு வருகை தருமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் நடவடிக்கையும் அன்றைய தினம் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

 
Top