ஏ.எச்.எம்.பூமுதீன்:
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் உடன் அமுலுக்கு வரும் வகையில் அப்பதவியிலிருந்து (தற்காலிகமாக) நீக்கப்பட்டுள்ளார்.அத்துடன் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் கட்சியின் உயர்பீடம் இன்று காலை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று காலை கொழும்பில் நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போது மேற்படி அறிவிப்பை கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் விடுத்தார்.
அதே நேரம் அ.இ.ம.காவுக்கு கிடக்கப்பெற்ற தேசியப்பட்டியலுக்கு புத்தளத்தைச் சேர்ந்ந்த நவவி நியமிக்கப்படதற்கு இன்று காலை இடம்பெற்ற கட்சியின் உயர்பீட கூட்டத்திலும் சூரா கவுன்சில் கூட்டத்திலும் ஏகமனதாக அங்கிகாரம் வழங்கப்பட்டது.
கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில்; இடம்பெற்ற மாநாட்டில் அ.இ.ம.கா சார்பாக தெரிவு செய்யப்பட்ட எம்பிக்களும் அம்பாறை மாவட்டத்தில் மயில் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

 
Top