வேட்பாளர் சித்தீக் நதீர் நன்றி அறிக்கை

(பி.எம்.எம்;.ஏ.காதர்)
இன்று 17ம் திகதி  நடைபெற்றது பாராளுமன்ற பொதுத் தேர்தலில்  எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மயில் சின்னத்திற்கு வாக்களித்த திகாமடுள்ள மாவட்ட மக்களுக்கு வேட்பாளர் சித்திக் நதீர் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெயீட்டுள்ளர்.
இந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :- இன்று நடைபெற்ற தேர்தலில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மயில் சின்னத்திற்கும், எனது 9ம் இலக்கத்திற்கும் வாக்களித்த திகாமடுள்ள மாவட்ட முஸ்லிம்,தமிழ்,சிங்கள மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பல சிரமங்களுக்கு மத்தியில் இன்று வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களித்து கஷ்டப்பட்டிருப்பீர்கள்  வயது முதிர்ந்தவர்கள்,தாய்மார்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் எனது இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

அதே போன்று இரவு  பகலாக என்னோடு இணைந்திருந்து பாடுபட்ட சகோதரர்கள்,நன்பர்கள்,உறவினர்கள் அனைவருக்கும் என்னோடு இணைந்து போட்டியிட்ட சக வேட்பாளர்களுக்கும் என்னை கட்சியில் இணைத்து வேட்பாளராக போட்டியிட வைத்த எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களுக்கும் எனது  இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் இத்தேர்தல் காலத்தில் எனது செய்திகளை பிரசுரித்த ஊடக நிறுவனங்களுக்கும்,இணையத்தளங்களுக்கும் செய்திகளை அனுப்பிய ஊடகவியலாளர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்  என இந்த நன்றி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

 
Top