மருதமுனையைச் சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எச்.எம்.ஹம்ஸா நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்  நாடு தழுவிய ரீதியில் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நடந்த போட்டிப் பரீட்சையில் தெரிவான இவர் சட்டத்துறையில் பதினான்கு வருடங்கள்  பணி  செய்துள்ளதுடன் கிழக்கு மாகாணத்திலுள்ள நீதிவான் நீதிமன்றம்-மாவட்ட நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றங்களில் பணியாற்றி நீதித்துறையினர் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டமாணி-பேராதனைப் பல்கலைக்கழக கலைமாணி மற்றும் முது கலை மாணி ஆகிய பட்டங்களைப் பெற்றதுடன் ஜக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா கற்கை பிரிவினால் நடத்தப்பட்ட மனிதாபிமான சட்டமும் அவசர கால  இணைச் செயற்பாடும் எனும் விசேட கற்கையினையும் பூர்த்தி செய்துள்ளார்.
 ஜ.நா வின் இலங்கைக்கான சிரேஸ்ட பதவி நிலை உத்தியோகத்தராகவும்     யு .எஸ்.எயிட் அமைப்பின் ஆலோசகராகவும் சட்ட மறுசீரமைப்புத் திட்டத்தின் இணைப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.
 மருதமுனையைச் சேர்ந்த கே.எம். ஹனீபா,மரியம் பீவீ தம்பதியரின் கனிஸ்ட புதல்வாரன இவர் இலங்கையில் தெரிவான 22 பேரில் ஒரே முஸ்லிம் நீதிபதியாக  தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது  . மருதமுனையில் நான்காவது நீதிபதியாக இவர் தெரிவாகியுள்ளார் .

இவருக்கு கல்முனை நியூஸ் இனைய தளம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது 

கருத்துரையிடுக

 
Top