தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 

ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய மூன்று கட்சிகளின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகத்தின் கடமை நேர அதிகாரி காமினி பொன்சேக்கா தெரிவித்தார். 

எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் விபரம் தொடர்டபான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வௌியிடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரம் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்றும், அது கிடைக்கப் பெற்றவுடன் வௌியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top