தெ.கி.அ.ச.சே.நிறுவனத்தின் தலைவர் அப்துல் ஜப்பார் சமீம் அறிக்கை

(பி.எம்.எம்.ஏ.காதர்)
புத்தளம் எம்.எச்.எம்.நவவிக்கு தேசியப்பட்டியல் மூலமான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வழங்கியமை கட்சித் தலைமையின் தீரக்க தரிசனமும்,புத்திசாதுர்ரியமுமாகும் என தென்கிழக்கு அஷ்ரப் சமூக சேவைகள் நிறுவனத்தின்  ஸ்தாபகத் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தருமான அப்துல் ஜப்பார் சமீம்  தெரிவித்துள்ளார்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் தெரிவு  தொடர்பில் விடுத்துள்ள அறிகையிலேயே அப்துல் ஜப்பார் சமீம் மேற்கண்டவாறு தெரிவித்தள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திரப்பதாவது :-இலங்கையின் எட்டாவது பொதுத் தேர்தலின் முடிவுகள் வெளியான கையோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான சகோதரர் றிஷாட் பதியுதீனின் இலங்கை முஸ்லிம்  மக்களின் தேசிய தலைமை என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார். 
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வடக்கு,கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் நான்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை பெற்றுள்ளது.ஆயினும் புத்தளம்,குருநாகல் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு ஆசனங்களை பெறும் எதிர்பார்ப்பு சொற்ப வாக்குகளால் கிடைக்காமல் போனது. இந்நிலையில் வடமேல் மாகாணத்திற்கு அரசியல் அதிகாரம் வழங்க வேண்டியது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தார்மீகப் பொறுப்பாகும்.
இதே நேரம் கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டத்திலும் தலா ஒரு ஆசன வீதம் மூன்று ஆசனங்களை எதிர்பார்த்த போதிலும் திருகோணமலை,மட்டக்களப்பு மாவட்டங்களில் தலா ஒரு ஆசன வீதம் இரண்டு ஆசனம் வெல்லப்பட்ட போதிலும் அம்பாறை மாவட்டத்தில் 2000 வாக்குக் குறைவால் ஒரு ஆசனம் கிடைக்காமல் போனது இந்நிலையில்  கட்சிக்கு கிடைத்த ஒரு தேசியப்பட்டியல்  ஆசனம் ஜெமீலுக்கா,ஹமிதுக்கா வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் புத்தளம் நவவிக்கு வழங்கப்பட்டுள்ளது. 
இவ்வாறான ஒரு நிலையில் கட்சியின் கட்டமைப்பும் வாக்கு வங்கியும் தளர்ந்து விடாத வகையில் கட்சியின்  தேசியத் தலைமை வடமேல் மாகாண மக்களின் நம்பிக்கையை வீணடிக்காமல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளமை பாராட்டுக்குரியதாகும்.
கிழக்கில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெல்லப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஒரு தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்தைக் கோருவது நியாயமானதாக அமையாது என்பதே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட ஆதரவாளர்களின் நிலைப்பாடாகும்.
இருந்த போதிலும் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு எற்பட்டுள்ள எழுச்சியானது எதிர் காலத்தில் மாகாண சபைத் தேர்தலில் மூன்று ஆசனங்களை வென்றெடுப்பதற்கான அத்திவாரம் இடப்பட்டுள்ளது.இவ்வாறே திருகோணமலை,மட்க்களப்பு மாவட்டங்களிலும் தலா மூன்று ஆசனங்கள் வீதம் கிழக்கில் ஒன்பது ஆசனங்களை வென்றெடுப்பதற்கான சாத்தியம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
இவ்வாறான ஒரு நிலையில் எதிர் வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் அம்பாறை மாவட்டம் கிழக்கின் மிக முக்கிய அரசியல் அதிகாரம் ஒன்றினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெறக்கூடிய வாய்ப்புள்ளது.
ஆகவே ஒரு பாராளுமன்ற  உறுப்பினரை வென்றெடுப்பதற்கு கை கோர்த்த அனைவரும் எதிர்காலத்தில் மூன்று மாகாண சபை உறுப்பினர்களை வென்றெடுப்பதற்கு அணிதிரளவேண்டும்.இவ்வாறான நிலையில் வட மேல் மாகாண மக்களின் துயர் துடைக்க தேசியத் தலைவர் றிஷாட் பதியுதீன் எடுத்த அரசியல் தீர்மானத்தை அரசியல் அவதானிகள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் வரவேற்றுள்ளனர்.
எனவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸை தளமாகக் கொண்டு செயற்படும் உள்ளுர் தலைமைகளும் தொண்டர்களும் குறிப்பாக அம்பாறை மாவட்ட கட்சி முக்கியஸ்தர்களும் நமது தேசியத் தலைமையின் தீர்க்க தரிசனமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்மானத்தை எண்ணி பெருமிதம் அடைவதுடன் தலைமையின் நீடித்த வாழ்வுக்காக இறைவனைப் பிரார்திற்க வேண்டும்; என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

  

கருத்துரையிடுக

 
Top