பொதுத் தேர்தலைக் குழப்பும் நவடிக்கைளில் ஈடுபடும் எந்த நபரையும் குறி வைத்து தலையில் சுடுமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நாட்டிலுள்ள சகல பொலிஸாருக்கும் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
வாக்களிப்பு நிலையங்களிலோ அல்லது வாக்கெண்ணும் நிலையங்களிலோ வன்முறைகளில் ஈடுபடுவோருக்கெதிராக இந்த கடுமையான கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது
பொதுத் தேர்தலை நீதியானதாகவும் சுதந்திரமானதாகவும் நடாத்துவதற்குரிய சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாட்டு மக்களைக் கேட்டுள்ளதோடு தேர்தல் சட்டத்தை முழுமையாகக் கடைப்பிடிக்குமாறும் அவர் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வாக்காளர்கள் எந்தவிதமான நெருக்கீடுகளுமின்றி தாம் விரும்பிய கட்சிகளுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்கும் அபேட்சகர்களுக்கும் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது
அதனடிப்படையில், இந்த இயல்பு நிலையைக் குழப்புவதற்கு எவராவது எத்தனித்தால் அவர் மீது அரசியலமைப்பின் 19 வது திருத்தத்திற்கமைவாக வழங்கப்பட்பட்டுள்ள உச்சகட்ட அதிகாரத்தைப் பாதுகப்புத் தரப்பினர் பிரயோகிப்பர்.
தேர்தலின் போதும் தேர்தலின் பின்னரும் நாட்டின் அமைதியைப் பாதுகாப்பதற்காக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறா வண்ணம் பொலிஸாரும், விஷேட அதிரடிப்பiயினரும் சேவையிலீடுபடுத்தப்படுவர்,
தேவைப்படுமிடத்து பொலிஸார் தமக்கு இராணுவ உதவிகளையும் வரவழைத்துக் கொள்ள ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
இடம்பெறுகின்ற எட்டாவது நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு கோடி 50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
நாடுபூராகவும் 12 ஆயிரத்து 314 வாக்களிப்பு நிலையங்களில் 1 இலட்சத்து 95 ஆயிரம் அதிகாரிகளும் 75 ஆயிரம் பொலிஸாரும் கடமையிலிருக்க இந்தத் தேர்தல் இடம்பெறுகின்றது.
196 நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களுக்காக நாடுபூராகவும் 6151 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.

கருத்துரையிடுக

 
Top