திகாமடுள்ள மாவட்டத்தில் கல்முனைத் தொகுதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கப் படவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் எம்.ஏகாம்பரம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

பாண்டிருப்பு திரளபதை அம்மன் ஆலய முன்பாக இன்று காலை 10.00 மணிக்கு இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப் பட்டது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும்இ பொது மக்களும் கலந்து கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டம் தொடர்கிறது.
  குறிப்பாக  தேர்தலில் போட்டியிட்ட ஹென்றி மகேந்திரனை நியமிக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப் பட்டுள்ளது . கருத்துரையிடுக

 
Top