(அப்துல் அஸீஸ்​ )


கல்முனை நகரில் அமைந்துள்ள  எ.ஆர். எம் . மன்சூர்  பொது நூலக பெயர் பலகை இன்று (10) அதிகாலை இனம்காணப்படாத நபர்களினால் சேதமாக்கப்பட்டு  பொருத்தப் பட்டிருந்த  இடத்திலிருந்து  அகற்றப் பட்டு  வீசப்பட்டுள்ளதாக  கல்முனை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செயப்பட்டுள்ளது.

பெயர் பலகை சேதமாக்கப்பட்டு  நூலக வளாகத்தின் பின்புறமாகவுள்ள ஒதுக்குப் புற   அடர்ந்த   பற்றைப் பகுதியில் வீசப்பட்டுள்ளதாக  நூலக  தலைமை பொறுப்பதிகாரியினால் இந்த  முறைப்பாடு செயப்பட்டுள்ளது.நேற்று கல்முனை தனியார் பஸ் தரிப்பிடத்தில்  வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களினால் சேதமக்கப்பட்ட வீதிப்பெயர்  கல்வெட்டு  அமைந்துள்ள இடத்தில்லிருந்து சுமார்  50மீட்டர் தூரத்தில் இவ் நூலகம் அமைந்துள்ளமையும்  குறிப்பிடத்தக்கது. 

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை செய்வதாகவும்  சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்  விரைவில் கைது செய்யப் படுவார்கள் எனவும் போலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .கருத்துரையிடுக

 
Top