(பழுலுல்லாஹ் பர்ஹான்)

2015 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிட்டு சுமார் 54 வாக்குகளால் தோல்வியடைந்த முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் சொந்த ஊரான காத்தான்குடி பிரதேசத்தில் மட்டக்களப்பு கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் 21 இன்று வெள்ளிக்கிழமை மாலை பாரியளவில் மக்கள் மகிழ்ச்சி களிப்பில் ஈடுபட்டதோடு ஹிஸ்புல்லாஹ்வின் பதாதைகளை ஏந்தி ஊர்வலமாகவும் சென்றதோடு பட்டாசு கொழுத்தி ஆராவரம் செய்தனர்.
இம் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் இளைஞர்கள்,சிறுவர்கள்,பெரியவர்கள் உட்பட பெரும் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துடன் பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top