கல்முனை மாநகர சபை உறுப்பினர்  சி.எம்.முபீத்


 அமைச்சர் றிசாத் பதியுதீன்  அம்பாறை மாவட்ட மக்களுக்கு ஒரு போதும் அநீதி இழைக்கமாட்டார் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சி.எம்.முபீத் தெரிவித்துள்ளார் .

கட்சியினால் வழங்கப் பட்ட தேசியல்  பட்டியல்  பாராளுமன்ற உறுப்பினர் விவகாரம்  தொடர்பாக கருது தெரிவிக்கும் போது  முபீத் கல்முனை நியூஸ் இணையதளத்துக்கு இவ்வாறு தெரிவித்தார் .

அவர்  தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்  கதியின் செயலாளர் நாயகம் சகோதரர் வை.எல்.எஸ். ஹமீது அவர்களின் பெயர் தேசியப் பட்டியலில் இருந்ததை யாரும் மறுப்பதற்கில்லை . எனினும்  எமது கட்சி  புத்தளம் ,அனுராத புரம்  மாவட்டங்களில் தலா ஒவ்வொரு ஆசனங்களை பெறும் என்ற ஆவலோடு இருந்தது . எனினும் சொற்ப வாக்குகளால் அது இல்லாமல் போனதால் புத்தளம் ,அனுராதபுரம் மக்கள்  அரசியலில் அனாதையாகி விடக் கூடாதென்பதற்காகவும்  கட்சிக்கும் ,தலைமைத்துவ துக்கும் கடனாளியாக இருந்த புத்தளம் மக்களை கௌரவப் படுத்தும் வகையிலும் தான்  நவவி அவர்களுக்கு தேசியப் பட்டியல் வழங்கப் பட்டுள்ளது . அதுவும் அவருக்கு ஓராண்டுக்கு மாத்திரமே  அம்மக்களை கௌரவப் படுத்துவதற்காக வழங்கப் பட்டுள்ளது . அதன் பின்னர் அந்த நியமனம் எமது செயலாளர் நாயகத்துக்கு வழங்கப் படவுள்ளது .

இந்த நிலையில் கட்சியின் செயலாளர் நாயகம்  தலைவருக்கு எதிராக செயற்படுவதாக அறிகின்றோம் . இந்த விடயத்தில் செயலாளர் நாயகம்  பொறுமை காத்து  கட்சியை அழித்து  விடுவதற்கான  காரணகர்த்தாவாக இருந்து விடாமல் தலைமைத்துவத்துடன் பேசி நல்ல முடிவுக்கு வர வேண்டும் .
ஏனெனில்  இந்தக் கட்சியை அம்பாறை மாவட்டத்தில் பெயர் சொல்ல வைத்தவர்கள்  நானும் எனது நற்பிட்டிமுனை மக்களுமே  இதற்காக நாங்கள் பல துன்பங்களை அனுபவித்துள்ளோம். இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் . பல சவால் நிறைந்த இக்காலகட்டத்தில் எமக்குள் பிளவுகளை ஏற்படுத்தி  எதிர்காலத்தை பாழாக்கிவிட முடியாது . எதிர்காலம் எமது கட்சி மூலம்  உள்ளூராட்சி மன்றங்களினதும், மாகாண  சபைகளினதும் பிரதிநிதித்துவங்களை  அதிகரிக்கக் கூடிய காலங்களாகும் .எனவே நாம்  ஒற்றுமையுடன் செயல் பட்டு  தலைமைத்துவத்தை பலப் படுத்தி வெற்றி காண ஒன்று படுவோம் .
செயலாளர் நாயகத்துக்கு  ஒருவருடத்தின் பின்னர் தேசியப் பட்டியல் பாராளுமன்ற நியமனம் வழங்குவதற்கு தலைமைத்துவம் நடவடிக்கை எடுத்துள்ளது . அந்த அடிப்படையில்  தற்போது நியமிக்கப் பட்டுள்ள புத்தளம் நவவி  ஓராண்டின் பின்னர் ராஜினாமா செய்வதக்கு உடன் பட்டிருகிண்டார் எனவும் முபீத் தெரிவித்தார் 

கருத்துரையிடுக

 
Top