வேட்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில்  
(பி.எம்.எம்.ஏ.காதர்;;;;)

உபவேந்தர் இஸ்மாயில் தேர்தலில் வெற்றி பெற்றால் எனது காதை அறுப்பேன், அவரை பாராளுமன்ற கதிரையில் அமர விட்மாட்டேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் தலைவர் றஊப் ஹக்கீம் அச்சுறுத்தியிருப்பது என்னை கொல்வதற்கான சதித்திட்டமாக இருக்கலாம் என எனது ஆதரவாளர்கள்   அச்சமடைந்துள்ளனர். நானும் அச்சமடைந்துள்ளேன் என தென்கிழக்குப் பல்கலைக் கழக முன்னாள் உப வேந்தரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஊடகவியலாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.
சாய்ந்தமருதில்  அமைந்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்திற்கான  செயலகத்தில் தேசிய அமைப்பாளரும் தெசியப்பட்டியல் வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தலைமையில்  இன்று(13-08-2015)மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வேட்பாளர் இஸ்மாயில் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் :- நீதித்துறையில் ஒரு அமைச்சராக இருந்தவர் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவிப்பதென்பது மிகவூம் கேவலமான மக்களைக் குழப்புகின்ற செயலாகத்தான் நாங்கள் பார்க்கின்றௌம்.
இவ்வாறு மக்களைக் குழப்புவதென்பது ஹக்கீமுக்கு முதல் தடவையல்ல காலத்திற்குக் காலம் வருகின்ற பிரச்சினைகளை முன்வைத்து அவர் மக்கள் மீது குழப்பமான கருத்துக்களை விதைத்துத்தான் இலாபம் சம்பாதித்து வருகின்றார்.
ஆனால் இம்முறை  அவரது குழப்பங்கள் எடுபடவில்லை இப்போது மக்கள் கேட்கின்றார்கள் ஹக்கீம் இனி காதை அறுப்பார்தானே அவர் காதை அறுத்து அதை ஏலத்தில் விட்டால் பத்து இலட்சம் ரூபாவூக்கு வாங்குவதற்கு தயாராக இருப்பதா பலர் காத்திருக்கின்றார்.
ஒரு கட்சியை வழி நடாத்துகின்ற ஒரு சமூகத்தை வழி நடாத்துகின்ற பொறுப்பு வாய்ந்த தலைவர் இவ்வாறு மக்களை குழப்புவதென்பது உண்மையில் மிகவூம் வெட்கக்கேடான விடையமா இருக்கின்றது.வேட்பு மனு தாக்கல் செய்த அன்றே எனக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தார்கள் ஆனால் அன்றே அந்த மனு நிராகரிக்கப்பட்து.அந்தச் செய்தியூம் மக்கள் மத்தியில் தீ போல் பரவி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்  மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கின்றது அதனால் மக்கள் என்னிடம் அலை அலையாக வந்து சேர்ந்திருக்கின்றார்கள்.
சம்மாந்துறையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் தலைவர் அஷ்ரப் அவர்களை மக்கள் எவ்வாறு ஆதரித்து  கட்சியை முன்னேற்றினார்களோ அவ்வாறே இன்று எமது கட்சியின் தலைவர் றிஷாட் பதியூதீன் அவர் களை மக்கள் ஆதரிக்கத் தொடங்கி விட்டார்கள்.
இதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு பொறாமையை ஏற்படுத்தியதா ? அதிருப்பதியை ஏற்படுத்தியதா என்று எனக்குப் புரிய வில்லை.அதற்குப் பின்னர் பல விஷமப் பிரச்சாரங்களை செய்து எனக்கு எதிராக வழக்குத்தாக்;கல் செய்து மக்களை குழப்பினார்கள்.
ஆனால் இன்று அந்த வழக்கு விசாரனை செய்யப்பட்ட போது எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லை என்பதால் இவ் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.இதனால் மக்களின் ஆதரவூ இன்னும்  அதிகரித்துள்ளது நாங்கள் இரண்டு ஆசனங்களை பெறுவோம் என்று மிகவூம் உறுதிப்பக் கூறுகின்றேன்.
இருந்த போதிலும் எனக்கு ஏதாவது உயிர் ஆபத்து ஏற்பட்டால் அதற்கான முழுப்பொறுப்பும்  முஸ்லிம் காங்கிரஸையே சாரும் எனத் தெரிவித்தார்.   

கருத்துரையிடுக

 
Top