சாய்ந்தமருது நலன்புரி அமைப்பில் இருந்து அதன் ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒருவரான தொழிலதிபர் ஹிபத்துள் கரீம் விலக்கப்பட்டுள்ளார் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை அரசியலில் நேரடியாக ஈடுபடுவதன் காரணமாகே பொதுவாக எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்தின் பிரகாரம் ஹிபத்துள் கரீம் தமது அமைப்பில் தற்போது உறுப்பினராக இல்லை என தெரிவித்து இந்த அறிக்கையில்  செயலாளர் என கையோப்பமிட்டிருக்கும் செயலாளர் ஏ.எம்.றமீஸ் என்பவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டு வருவதை எம்மால் அவதானிக்க முடிகிறது. அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப் படுமா என கேள்விகள் எழுந்துள்ளன .

கருத்துரையிடுக

 
Top