(பி.எம்.எம்.ஏ.காதர்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று(09-08-2015-ஞாயிறு)  இரவு  மருதமுனை கடற்கரையில் திறந்த வெளியில்  வேட்பாளர் மருதமுனை சித்தீக் நதீர் தலைமையில் நடைபெற்றது.
இங்கு கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியூதீன், செயலாளர் நாயகமும் தேசியப்பட்டியல் வேட்பாளருமான  வை.எல்.எஸ்.ஹமீட்,தேசிய அமைப்பாளரும் , தேசியப்பட்டியல் வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல், முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் வேட்பாளர்களான சித்தீக் நதீர்,கலாநிதி சிராஸ் மீராசாஹிப்,கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில்,எஸ்.எஸ்.பி.மஜீட், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.கலீலுர் றஹ்மான்,முஹம்மட் நபீல், அன்வர் எம் முஸ்தபா, மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எம்.துல்கர் நயீம், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான இஸட்.ஏ.எச்.றஹ்மான், சி.எம்.முபீத். பேச்சாளர்ளான வை.கே.றகுமான்,அப்துல் ஜப்பார் சமீம் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். 
இக்கூட்டத்தில் பெருந்தொகையான ஆதரவாளர்கள் நள்ளிரவு  தாண்டி 12.30 மணிவரை அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

கருத்துரையிடுக

 
Top