கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பரினால் கடந்த வாரம் எம்.எஸ்.காரியப்பர் வீதி என கல்முனையில் திறந்து வைக்கப் படவிருந்த வீதிக்கான நினைவூக்கல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகாமடுள்ள மாவட்ட வேட்பாளர் ஹென்றி மகேந்திரன் என்பவரால் அடித்து நொறுக்கப் பட்ட சம்பவம் தொடர்பாக பல தரப்பினராலும் கண்டனம் வெளிப்படுத்தப் பட்ட நிலையில் 

சட்டத்துக்குப் புறம்பாக ஒரு மாநகர முதல்வராக இருந்து கொண்டு சட்டத்தை மதிக்காமல் கபடத்தனமாக இ கள்ளத்தனமாக  தமிழ் கிராமங்களை அபகரிக்கின்ற  நோக்கத்தில் கல் நட்ட விவகாரத்துக்கு காவல் துறையினரும் நீதி மன்றமும் முதலில் கல்முனை மாநகர முதல்வருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இந்த விடயம் தொடர்பாக நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக  என்னுடைய மக்கள் சார்பாக  இந்த நாட்டில் உள்ள எந்த நீதி மன்றத்திலும் எனது மக்களின் நிலங்கள் பாதுகாக்கப் படுவதற்காக  சட்ட நியாயங்கள் பெறுவதற்கு வாதாட தயாராக இருக்கின்றேன் என்று வேட்பாளர் ஹென்றி மகேந்திரன் நேற்று கல்முனையில் அவரது செயலகத்தில் இடம் பெற்ற ஊடக மாநாட்டில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

 
Top