ஓய்வு பெற்ற  மேல் நீதி மன்ற நீதி அரசர்  பொ .சுவர்ணராஜ்

தமிழ் மக்களின்  எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமாக இருந்தால்  ஐக்கிய தேசியக் கட்சியை  வெற்றியடையச் செய்வதன்  மூலமே  முடியும் . அதிலும் குறிப்பாக  ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும்  தமிழ் வேட்பாளர்களை  ஆதரித்து  அவர்களை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்வதன் மூலம்  எதிர் காலத்தில்  புதிதாக ஆட்சியமைக்கவுள்ள  ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற் படுவதன் மூலம் உரிமையுடன் அரசுடன் பேசி தமிழ் மக்களின்  குறைகளுக்கு  தீர்வு காண முடியும் .

இவ்வாறு  திகாமடுல்ல மாவட்டத்தில்  யானை சின்னத்தில்  போட்டியிடும் 07 ஆம் இலக்க வேட்பாளரான  ஓய்வு பெற்ற  மேல் நீதி மன்ற நீதி அரசர்  பொ .சுவர்ணராஜ்  தெரிவித்தார் .

இன்று  கல்முனை பீச் ரேஸ்ரூரன்ட்  விடுதியில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில்  மேற்கண்டவாறு  தெரிவித்தார் .

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மக்களை உசுப்பேற்றி வீர வசனங்களை  பேசுவதால் தமிழ் இனத்தின் தேவைகளும் ,பிரச்சினைகளும் நிறைவேறப் போவதில்லை  அதனை விடுத்து  இந்த நாட்டை ஆளப் போகின்ற அரசுடன் பங்காளியாகி எமது இனத்தின் 30 வருட கால அபிலாசைகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று பட்டு  யானை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் . அதன் மூலம்  தமிழர்களின்  அபிலாசைகள்  நிறைவேறும் வாய்ப்புள்ளது. அந்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்த யானை சின்னத்தில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் தமிழர்களால் ஆதரிக்கப் பட வேண்டும் .

குறிப்பாக  அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் பல தீர்க்கப் படாத  பிரச்சினைகளை நான் இனங்கண்டு அடையாளப் படுத்தியுள்ளேன் . எமது அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறியதும்  அத்தனை  பிரச்சினைக்கும் பிரதமர் ரணில் ஊடாக தீர்வைக் காணலாம் என  நம்பிக்கை உள்ளது . குறிப்பாக கல்முனை நவீன நகர அபிவிருத்தி திட்டத்தில் தமிழ் மக்களின்  வகிபாகம் தொடர்பாக நாம் அமையப் போகும் அரசுடன் பேச வேண்டியுள்ளது அது நிச்சயமாக  ஐக்கிய தேசியக் கட்சியே ஆகும் . அவ்வாறான நிலையில் எம்மைப் போன்றவர்கள்  மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்ற போது எமக்கான சாதகங்கள் அதிகமாக இருக்கும் என அவர் தெரிவித்தார் 

கருத்துரையிடுக

 
Top