பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவித்தது முதல் இன்றுவரை தேர்தல் தொடர்பான 961 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என பெபரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதில் 74 முறைப்பாடுகள் வன்முறை சம்பவங்கள் தொடர்பானவை எனவும் 887 சம்பவங்கள் தேர்தல் சட்ட விதிகளை மீறியவை என்றும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.
 
பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் 490 முறைப்பாடுகளும் கொலை சம்பவங்கள் தொடர்பாக 3 முறைப்பாடுகளும், சொத்து சேதம் மற்றும் பிரசாரம் தொடர்பான 40 முறைப்பாடுகளும்,  தாக்குதல் தொடர்பாக 31 முறைப்பாடுகளும்  பதிவாகியுள்ளன என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துரையிடுக

 
Top