தேர்தல் சட்டங்களை மீறிய 797 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர.கைதானவர்களில் 12 வேட்பாளர்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது. எனினும் அம்பாறை மாவட்டத்தில்  தேர்தல் விதி முறையை மீறி உலங்கு வானூர்தியில்  பவனிவந்து பிரச்சாரம் செய்யும் தயா கமகே இன்னும் கைது செய்யப் படவில்லை . இவரது சட்ட மீறல் தொடர்பாக  நேற்று பெப்ரல் தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் முறைப்பாடு செய்யப்பட்டது அதனையும் மீறி இன்றும் சேனைக்குடியிருப்பு விஷ்ணு தேவாலயத்தில் உளங்கு வானூர்தியில் வந்து பிரச்சாரம் செய்தார் . இதற்க்கு சாட்சியாக  அம்பாறை மாவட்ட பெப்ரல் கண்காணிப்பாளர் கே.சத்தியநாதன் காணப் படுகின்றார்  என  மக்கள் முறையிடுகின்றனர். 
தேர்தல் சட்ட மீறல்களில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. சட்டவிரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வதற்கான 275 சுற்றிவளைப்புகள் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த சுற்றிவளைப்புகள் மூலம் 634 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இதுதவிர தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 357 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன், இவற்றின் மூலம் 163 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேகநபர்கள் அனைவருக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.தேர்தல் காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுற்றிவளைப்புகளின் மூலம் 207 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றை பொலிஸார் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.
நீதிமன்ற நடவடிக்கையின் பின்னரே இந்த வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துரையிடுக

 
Top