இம்மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் கடமைகளில் நாடு முழுவதும் சுமார் 70,000 இற்கும் மேற்பட்ட பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேக்கர தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் 70,549 பொலிஸ் அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதற்கு மேலதிகமாக 4,825 விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக்கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஒரு வாக்களிப்பு நிலையத்திற்கு  இரு பொலிஸார் வீதம் 12, 399 நிலையங்களில் பொலிஸார் பாதுகாப்புக்கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் 2,885 பொலிஸார் நடமாடும் பாதுகாப்பு சேவைகளில் ஈடுபடுத்தப்படுவுள்ளனர்.

மேலும் 161 கலகமடக்கும் பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்படுவதுடன் நாட்டின் அமைதியையும் ஒழுங்கவிதிகளையும் பாதுகாக்கும் கடமையில் கவனம் செலுத்தவர். தேர்தல் கடமைகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி கடமைகளை பொறுப்பேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top