பாராளுமன்ற தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள  ஆசிரியர்கள் மற்றும் பொலிஸாருக்குமான  முதல்கட்ட தபால் வாக்களிப்பு இன்று ஆரம்பமானது.

கல்முனை கல்வி வலயத்திலுள்ள 65 பாடசாலைகளில் கடமை புரியும் ஆசிரியர்கள் இன்று வாக்களித்தனர்.

வலயக் கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 04 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 9.00 மணி தொடக்கம் வாக்களிப்பு சுமுகமாக இடம் பெற்றது.

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் 295 தபால் வாக்காளர்களும், நிந்தவூர் கோட்டக் கல்வி அலுவலகத்தில் 176 வாக்காளர்களும், கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் 145 வாக்காளர்களும், மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியில் 80 வாக்காளர்களுமாக 696 ஆசிரியர்கள் வாக்களித்தனர்.

வாக்களிப்பு இடம் பெற்ற சமயம் தேர்தல் கண்காணிப்பாளர்கள், மற்றும் முகவர்களும் நிலையங்களில் பிரசன்னமாகி இருந்தனர்.

இதே வேளை தேர்தல் கடமைகளில் ஈடு படவுள்ள கல்முனை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 203 பொலிஸ் உத்தியோகத்தர்களும் இன்று தபால் வாக்களிப்பில் கலந்து கொண்டனர்.


கருத்துரையிடுக

 
Top