ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நாளை காலை ஆரம்பமாகிறது. பரீட்சைக்குத் தோற்றும் தமது பிள்ளைகளை நேர காலத்துடன் பரீட்சை மண்டபத்துக்கு அழைத்துவரு மாறு பரீட்சை ஆணையாளர் சகல பெற்றோரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாளை காலை 9.30 க்கு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஆரம்பமாகிறது. இதில் 3 இலட்சத்து 40 ஆயிரத்து 926 மாணவர்கள் 2907 பரீட்சை நிலையங்களில் தோற்றவுள்ளனர்
26,000 பேர் பரீட்சை நடவடிக்கைக ளுக்காக பயன்படுத்தப்படுகின்றனர். இதற்கு மேலதிகமாக 530 பேரும் பரீட்சைக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
பரீட்சைக்குரிய முதலாவது வினாத்தாள் பரீட்சை காலை 9.30 மணி முதல் 10.15 வரை நடத்தப்படும். 1 1/4 மணி நேரம் பரீட்சை நடைபெறும்.
இரண்டாவது வினாத்தாளுக்கான பரீட்சை 30 நிமிட இடைவேளைக்குப் பின் 10.45 க்கு ஆரம்பமாகும். இப்பரீட்சை பகல் 12.00 மணிக்கு நிறைவடையவுள்ளது.
பரீட்சைக்கு பிள்ளைகளை அழைத்து வந்ததன் பின்னர் பரீட்சை மண்டப வளவுக்குள் பெற்றோர் வருவது தடைசெய்யப்பட்டுள்ளது. இடைவேளை நேரத்திலும் பெற்றோர் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது.
தமது பிள்ளைகளுக்கு அதிகளவு உணவு வழங்க வேண்டாம் என்றும் குடிப்பதற்கு தண்ணீர் போத்தல் ஒன்றை வழங்குமாறும் பெற்றோரிடம் பரீட்சை ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாளை நடைபெறவுள்ள பரீட்சை தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் முறைப்பாடுகள் செய்ய வேண்டுமாயின் 24 மணி நேரமும் இயங்கும் பரீட்சை திணைக்களத்தின் 1911 என்ற அவசர இலக்கத்துக்கோ அல்லது 011-2784208 / 0112-785537 / 011 - 3188350 / 011-3140314 என்ற இலக்கங்களுக்கோ அல்லது பொலிஸ் தலைமையகத்தின் 119 அல்லது 011 - 2421111 இலக்கங்களுடனோ தொடர்புகொண்டு அறிவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top