தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு பகுதி நேர வகுப்புக்கள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடாத்துவதற்கு இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

பரீட்சைக்கான மாதிரி வினாக்கள் மற்றும் விடைகள் அச்சிடுதல் மற்றும் அவற்றை விநியோகித்தல் கையேடுகள் அச்சிடுதல் மற்றும் அதனை விநியோகித்தல், பகுதி நேர வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடாத்துதல் போன்றவற்றிற்கும் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பரீட்சை திணைக்களத்தின் இந்த அறிவுறுத்தலை மீறும் மாணவர்கள், ஆசிரியர்கள அல்லது நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவ்வாறு மீறுவோர் தொடர்பாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பரீட்சைகள் திணைக்கள்திற்கோ தகவல் தருமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 23ம் திகதி நடைபெறவுள்ளது.

கருத்துரையிடுக

 
Top