பொதுத்தேர்தலை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இம்மாதம் 17, 18,19ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படவுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நோன்பு காலத்தில் இரண்டாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்ட முஸ்லிம் பாடசாலைகள் கடந்த மாதம் 21ஆம் திகதியே ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில் பொதுத்தேர்தல் காரணமாக மூன்று நாட்கள் விடுமுறை வழங்க அமைச்சு தீர்மானித்துள்ளது.ஏனைய பாடசாலைகளுக்கு தற்போது இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top