வடமாகாண சபையின் 33 ஆவது கூட்டத் தொடர் இன்று செவ்வாய்க்கிழமை வடமாகாண சபையின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் கைதடியில் உள்ள சபை மண்டபத்தில்  இடம்பெற்றது. வடமாகாண சபயில் நிறைவேற்றப்பட்ட 200 இற்குமேற்பட்ட தீர்மானங்களுக்கு என்ன நடந்ததுகுறித்ததீர்மானங்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?எனக்கேட்டு மாகாண சபை உறுப்பினர் ஜீ்.ரி.லிங்கநாதன் விநோத   போராட்டம்  ஒன்றை நடத்தியுள்ளார்.
மாகாண சபையின் 33 வது அமர்வு தற்போதுநடைபெற்று வருகின்றது
இந்நிலையில் வவுனியா மாவட்ட மாகாண சபைஉறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் நிறைவேற்றப்பட்டதீர்மானங்களை தனது சட்டை முழுவதும்எழுதிக்கொண்டு சபைக்கு வந்த்துடன்,
தனது 12 கோரிக்கைகளை முதலமைச்சருக்கும்,அவை தலைவருக்கும்உறுப்பினர்களுக்கும்வழங்கியதுடன் சபையில் பதாகைகளுடன் கூடியசட்டையுடன் சபையில் அமர்ந்துள்ளார்.
இதேவேளை யாழ்.மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் முதற்றடவையாக வட மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் வழி மொழியாமையால் சபையினால் கைவிடப்பட்டுள்ளது. 

Post a Comment

 
Top