(பி.எம்.எம்;.ஏ.காதர்)
இலங்கை ஜனநாயக சோஸலிச குடியரசின் 8வது பாராளுமன்ற பொதுத் தேர்தல் இன்று 17ம் திகதி மிகவும் அமைதியாக நடைபெற்றது.மருதமுனை பிரதேசத்தில் 11 வாக்களிப்பு நிலையங்ளில் 11.906 வாக்காளர்கள் வாக்களிக்கத்தகுதி பெற்றிருந்தனர்.
இங்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்  சித்தீக் நதீர் தனது ஆதரவாளர்கள் சகிதம் வாக்களிக்கச் சென்றார்.அதே போன்று கல்முனை மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் மற்றும் அவரது  அதரவாளர் உள்ளிட்ட வாக்காளர்கள் வாக்களிக்கச் சென்றதை காணமுடிந்தது. 
இருந்த போதிலும் வாக்களிப்பு நண்பகல் 1.00 மணிவரை மிகவும் மந்தகெதியிலேயே நகர்ந்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.   

கருத்துரையிடுக

 
Top