எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் 10 இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசி்ங்க தெரிவித்துள்ளார். அதில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள இளைஞர், யுவதிகளுக்கு ஒரு இலட்சம் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கவுள்ளேன். என திகாமடுல்ல மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் போட்டியிடும் தலைமை வேட்பாளரும், கை்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளருமான தயா கமகே தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபவத்தில் இன்று சனிக்கிழமை(08) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே- அம்பாறை மாவட்டத்தை தளமாக கொண்டு சுற்றுலா முக்கோண திட்டமொன்றை ஏற்படுத்தி கிழக்கு மாகாணத்தில் அறுகம்பை, பாசிக்குடா போன்ற பிரதேசங்களை அபிவிருத்தி செய்து இப்பிரதேச இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பக்களை வழங்கவுள்ளதோடு, இம்மாவட்டத்தை இலங்கையின் இரண்டாவது பொருளாதார வலயமாக மாற்றி அமைக்கவுள்ளேன்.
இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாப்புக்களை பெற்றுக்கொடுக்கவுள்ளதுடன், பெண்களுக்கான சிறுகைத்தொழில் முயற்சிகளை ஊக்குவித்து அதன் ஊடாக பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவுள்ளோம். 
கொழும்புக்கு அடுத்த படியாக அம்பாறை மாவட்டத்தை கடடியெழுப்பி அபிவிருத்தி செய்ய உத்தேசித்துள்ளோம். இதன் போது அம்பாறை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களை் நவீன நகரங்களாக மாற்றியமைக்கப்படும். இங்கு வீட்டு வசதியில்லாத 27 ஆயிரம் குடும்பங்களுக்கு எதிர்வரும் 60 மாதங்களுக்குள் வீட்டு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.
அன்று ஐக்கிய தேசியக்கட்சி எனும் பஸ்ஸை ரவுப் ஹக்கீமை கொண்டுதான் செலுத்தினோம். ஆனால் இன்று அந்த நிலைமை மாறி ஐக்கிய தேசியக்கட்சியினரே அந்த பஸ்ஸை ஓட்டிச்செல்கின்றோம். முஸ்லிம் மக்கள் எமக்களிக்கின்ற ஆதரவின் மூலம் புட்போட்டில் தொங்கிக் கொண்டு எம்மோடு பயணம் செய்கின்றவர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி பஸ்ஸைவிட்டு தாமாகவே இறங்கிவிடுவார்கள்.
எனவே எதிர்வருகின்ற தேர்தலில் அனைத்து மக்களும் ஐக்கிய தேசியக்கட்சியினை ஆதரித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்.என்றார்
இம்மாநாட்டில் திகாமடுல்ல மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர்களான யு.கே. ஆதம்லெவ்வை. எம்.எஸ்.அப்துல் றசாக், பீ. சுவர்ணராஜா ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top