(அகமட் எஸ். முகைடீன்)

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக திகாமடுள்ள மாவட்டத்தில் மயில் சின்ன ஐந்தாம் இலக்க வேட்பாளர் கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிபின் வெற்றியின் பங்காளிகளாக செயற்படுவதற்கு மாளிகைக்காடு slmc மத்திய குழு உறுப்பினர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டனர்.

அவர்கள் இங்கு கருத்துத் தெரிவிக்கையில் கடந்த காலங்களில் மக்கள் ஆணை பெற்ற மக்கள் பிரநிதிகள் இருந்தபோதிலும் எவ்விதமான பலனையும் எமது பிரதேசம் பெறவில்லை. மக்களோடு மக்களாக நின்று மக்கள் பணி செய்யத் தகுதியானவரை எமது வாக்குப் பலத்தின் மூலம் தேர்ந்தெடுக்க கடமைப்பட்டுள்ளோம். கடந்தகாலத்தில் கல்முனை மாநகர முதல்வராக செயற்பட்ட சிராஸ் மீராசாஹிப் மிகுந்த அர்பணிப்புடன் இரவு பகலாக மக்கள் பணி ஆற்றியதை நாம் அறிவோம். அந்தவகையில் அவரின் கரத்தைப் பலப்படுத்தி அவரை வெற்றிபெறச் செய்ய உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தனர். 

கருத்துரையிடுக

 
Top