வெளிநாடுகளில் வசிக்கும் பொத்துவில் சகோதர்களால் நடாத்தப்படும் சமூக சேவை அமைப்பான பொத்துவில் வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்பின் (PFIF) சர்வேத மாநாடு, பொதுக்கூட்டம் மற்றும் இப்தார் நிகழ்வு என்பன கடந்த 03/07/2015  திகதி கட்டாரில் இடம்பெற்றது.
பொத்துவில் பிரதேசத்தினை பொருளாதார சமூக கலாசார கட்டமைப்பில் துறைசார் தேர்ச்சி மற்றும் சமூக நலன்களை முதன்மைப்படுத்தி இவ்வமைப்பு இயங்கிவருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.
கட்டாரில் இடம்பெற்ற PFIF அமைப்பின் சர்வதேச மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் என்பன தலைவர் ‌குத்துாஸ் மௌலவி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
PFIF அமைப்பின் தோற்றம் கடந்தகால செயற்படுகள் தொடர்பிலும் இஸ்லாத்தில் சமூகசேவை மற்றும் ஸக்காத் சதகா பற்றியும் , சமூகத்திற்கு நாம் செய்யவேண்டிய கடமைகள் இஸ்லாமிய வரையறைக்குற்படுதல் போன்ற பல விடயங்கள் பற்றி தனது உரையில் குறிப்பிட்ட மௌலவி குத்துாஸ் அவர்கள் எதிர்காலத்தில் தன்னிறைவு பெற்ற பொத்துவில் நகரத்தை அடைந்து கொள்ள அனைவருக்கும் அழைப்புவிடுத்தார்.
இதனைத்தொடர்ந்து PFIF அமைப்பின் தோற்றம்,சவால்கள் பொத்துவில் பிரதேசத்தின் தற்போதய நிலமை, சவால்களை வெற்றிகொள்ளக் கூடிய திட்டங்கள்,  திட்டங்களை செயற்படுத்த தேவையான காரணிகள் மற்றும் கடந்தகால செலவீனம்
மற்றும் இருப்புக்கள் தொடர்பாக அமைப்பின் பொருளாலர் இம்தியாஸ் சலீம் அவர்களினால் ஆவணப்படங்கள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.
அதன்பின்னர் PFIF அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பிலும் சபையில் தெளிவு படுத்தப்பட்டதுடன் நிகழ்விற்கு வருகை தந்தவர்களின் எதிர்பார்ப்புகள் , திட்டங்கள் மற்றும் கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டது.
அதனைதொடர்ந்து PFIF அமைப்பின் நிருவாகத்தெரிவு மௌலவி குத்துாஸ் அவர்களின் தலைமையில் இஸ்லாமி தலைமைத்துவம் மற்றும் நிருவாக சபை சம்பந்தமக தெளிவுபடுத்தப்பட்டதனை தொடர்ந்து தெரிவு ஆரம்பமானது.
தலைவர்:- ஏ கிவ். எம். சாகிர் மௌலான
உப தலைவர்கள்:- ஏ.பி.எம் . குத்துாஸ் மௌலவி.
எம். ஜெஹியாகான்
செயலாளர் :- கே. ஜெலீல்
உப செயலாளர் :- எம்.ஐ.எம் . முஸம்மில்
பொருளாலர்:- எம். எஸ். இ‌‌ந்தியாஸ்
உப பொருளாலர்:- எம். ஏ. முதாஸர்

ஊடகப் பணிப்பாளர் :- ஏ.எம் ஹாஸிம்
சூரா சபை:-
யாஸீர் எஸ் ஹமீட்
எம் எச் எம். றியாஸ்
ஏ.எம்.எம் . நபீல்
ஏ. அலி உஸ்மான்
ஏ.டபில்யு. ஹலீம்.
ஏ எல் ஜஹான்
எச் எல் எம். இம்தியாஸ்
எம் ஏ. அமினுதீன்
ஏ.எம் . பஸ்லி
எல். டி. ரூஹூல்லாஹ் மௌலவி
ஜே. நிஸார்.

ஆகியோர். தெரிவு செய்யப்பட்டதுடன் இப்தார் நிகழ்வும் இடம்பெற்றது.
இறுதியாக புதிய செயலாளர் ஜெலீல் அவர்களின் நன்றியு‌ரையுடன் கூட்டம் நிறைவுபெற்றது.

நீங்களும் சமூகசேவை அமைப்பான PFIF இணைந்துகொள்ள விரும்பின்
தொடர்புகொள்ள -pfif2011@gmail.com
 குறித்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பு செய்யபட்டது முழு நிகழ்வையும் கீழுள்ள வீடியோவில் காணலாம்- https://youtu.be/flVBmdDvEFo

தகவல்- PFIF ஊடகப்பிரிவு 

கருத்துரையிடுக

 
Top