(எஸ்.எம்.எம்.றம்ஸான் )

ரமழான் மார்க்க சொற்பொழிவு 2015 என்ற தலைப்பில் ரமழான் காலத்தில் மௌலவி யு.எல்.அம்ஜதினால் மஸ்ஹுறா தைக்காவில் ஆற்றப்பட்ட மார்க்க சொற்பொழிவை உள்ளடக்கிய இறுவெட்டு ஒன்று வெளியிடும் நிகழ்வு இன்று கல்முனை மஸ்ஹுறா தைக்காவில் இடம் பெற்றது.

பள்ளித் தலைவர் ஏ.அப்துல் பாறுக் தலைமையில் இடம் இந்நிகழ்வில் இந்தியாவைச் சேர்ந்த மௌலானா  மௌலவி அல் ஆலிம்  அஷ்யெ்யத் எஸ்.பதுஹுல்ல பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு முதற் பிரதியை மௌலவி யு.எல்.அம்ஜத்திடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் மௌலானா  மௌலவி   அஷ்யெ்யத் எம்.மஸ்ஹுறா, மௌலானா  மௌலவி   அஷ்யெ்யத் எஸ்.பி.ஹிபத்துல்ல போன்றோர் விஷேட அதிதிகளாக கலந்து கொண்டதுடன் பள்ளிவாசல் நிருவாகிகளும் பிரமுர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துரையிடுக

 
Top